கோயில்கள்

இன்றைய ராசிபலன் 14.10.2016

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த...

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடை வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்: காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை வந்துப் போகும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. புது முயற்சிகள் சற்று தாமதமாகும் நாள்.

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

Related

புதிய செய்திகள் 4744127706690872893

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item