கோயில்கள்

இன்றைய ராசிபலன் 16.10.2016

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரி...

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.நண்பகல் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும்  நாள்.

ரிஷபம்:  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உங்கள் நம்பிக்கைக்குரியவரை  கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் உங்களின் முயற்சி வெற்றி அடையும். சிறப்பான நாள்.

மிதுனம்: உங்கள் எதிர் பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்  கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் உங்களின் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சிறப்பான நாள்.

கடகம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் உங்களுக்கு நண்பர்களாவார்கள். எதிர்பாராத  இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உற்சாகமான நாள்.

சிம்மம்:  நண்பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை  ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். மாலைப்பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடை வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை  சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அரசால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.  பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை நீங்கள் தேடுவீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்: உங்களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்கள் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க  தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை  சாமர்த்தியமாக நீங்கள் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம்  உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில  வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மீனம்: நண்பகல் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை பற்றிய வதந்திகளை முறியடித்து முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் நீங்கள்  மூழ்குவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 4812632294623740636

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item