கோயில்கள்

இன்றைய ராசிபலன் 18.10.2016

மேஷம்: மாலை 3.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உர...

மேஷம்: மாலை 3.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மாலை 3.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கடகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். 

கன்னி: மாலை 3.00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 

துலாம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாலை 3.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.அழகு, இளமைக் கூடும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

Related

புதிய செய்திகள் 7202711882962526992

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item