கோயில்கள்

இன்றைய ராசிபலன் 23.10.2016

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட் டாரத் தொடர்புகள் அதிகரிக் கும். தாயாரின் உடல் நலத் தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி ...

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட் டாரத் தொடர்புகள் அதிகரிக் கும். தாயாரின் உடல் நலத் தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.
வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். எதிர்பார்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளை கள் பொறுப்பாக நடந்துக் கொள் வார் கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொட ங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்: கடினமான காரிய ங்களையும் எளிதாக முடிப் பீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவர். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்: வருங்காலத் திட் டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 5412727672257461325

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item