கோயில்கள்

நவராத்திரி விரதம்

புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ...

புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று அமைகின்றது. நவமி 10 ஆம் திகதி முன்னிரவில் அற்றுப்போகின்றது. எனவே விரதம் 01 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். மறுநாள் விஜயதசமி மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது. பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு எப்படி நாட்களைப் பகுப்பது? நாட்களைப் பகுப்பது என்பது ஒரு கருத்தியல்தான். கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும்தான் செய்யப்படுகின்றது. ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூலநட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுறும். மறுநாள் 11.10.2016 செவ்வாய்க்கிழமை விஜயதசமி – ஏடு தொடக்குதல் மானம்பு உற்சவம் இடம்பெறும்.

Related

நிகழ்வு 8475222020840025490

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item