கோயில்கள்

சிவன் அபிஷேகம்

சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.    ...

சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

  
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

சுத்தமானப் பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

ஒவ்வொரு அபிஷேகதின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும்.  ஈசனுக்கு அபுஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.

Related

புதிய செய்திகள் 8096660366633210564

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item