கோயில்கள்

சோட்டா தீபாவளி

தீபாவளிக்கு முன்தினத்தை சோட்டா தீபாவளி அல்லது குட்டி தீபாவளி என்று கொண்டாடுவது வழக்கம். நரக சதுர்த்தசி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து...

தீபாவளிக்கு முன்தினத்தை சோட்டா தீபாவளி அல்லது குட்டி தீபாவளி என்று கொண்டாடுவது வழக்கம். நரக சதுர்த்தசி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து அழகான பெரிய ரங்கோலி கோலங்கள் போடுவர். அரிசி மாவில் சிறிய பாதங்களை வீட்டின் வெளியிலிருந்து உள்ளே வருவது போல் வரைந்து வைப்பர். அது லஷ்மியின் பாதங்களாக பாவித்து வரைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று மாலை லஷ்மி மற்றும் மஹாவிஷ்ணுவிற்கு பிரத்தியேக பூஜைகள் செய்யப்படும். பிறகு இருட்டத் துவங்கும் போது சிறு அகல் விளக்குகளை ஏற்றி வீட்டின் வெளியே குறிப்பாக துளசி மாடம் போன்ற இடங்களில் வைப்பர்.

நகர சதுர்த்தியான இந்த நாளை ‘பாலி பிரத்திபாதா’ என்றும் அழைக்கின்றனர். பாலி என்பது ‘பாலி மஹாராஜாவை’ குறிக்கும். பிரத்திபாதா என்பது ‘பாதங்களுக்கு கீழே’ என்று பொருள்படும். ஆணவம் அதிகம் கொண்டு எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்த பாலி மஹாராவின் அகந்தையை மஹாவிஷ்ணு அடக்க நினைத்தார். 

சிறு குழந்தையாக ‘வாமன்’ அவதாரம் எடுத்து பாலியின் அரசவைக்கு வந்தார். வாமனின் புத்தி கூர்மையை பாராட்டி கேட்ட வரம் தருவதாக பாலி கூறினார். தன் கால் அளவில் மூன்றடி நிலம் வேண்டும் என்று வாமனன் கேட்க, இவ்வளவுதானா என்று பாலியும் வரம் தந்தாள். உடனே விஸ்வரூபம் எடுத்த வாமனன் முதல் அடியில் பூலோகத்தையும், இரண்டாவது அடியில் விண்ணுலகத்தையும் மூன்றாவது அடியை வைக்க இடமில்லாமல் பாலியின் தலையிலும் பாதம் வைக்க, பாலியின் முடிவும் ஏற்பட்டது.

சோட்டா தீபாவளி என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நாளில் இனிப்புகள் செய்து படைப்பது, லஷ்மி பூஜை, தீபம் ஏற்றுவது, பட்டாசு வெடிப்பது என்று எல்லா முறைகளும் தீபாவளி போலவே கடைபிடிக்கப்படுகிறது.

நரகாசுரன் இறந்ததை கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருந்தாலும், நரகாசுரனுடன் சண்டையிட்டு அவனை கொன்ற நாள் சோட்டா தீபாவளி என்றும் கூறப்படுகிறது. நரகாசுரனை தானே கொல்ல விரும்புவதாக சத்யபாமா கூற, அவளுக்கு தேரோட்டியாக கிருஷ்ணனே செல்ல, சத்யபாமா நரகாசுரனை வதைத்ததாக புராணம் கூறுகிறது. எனவேதான் தீபாவளிக்கு முன்தின மாலையில் லஷ்மி மஹாவிஷ்ணு பூஜை செய்யப்படுகிறது

Related

புதிய செய்திகள் 8739432572929835411

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item