கோயில்கள்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் யாசகர்கள் நிலை..?

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலய சூழலில் பிச்சைக்காரர்களின் படையெடுப்பு என்றுமில்லாத...

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலய சூழலில் பிச்சைக்காரர்களின் படையெடுப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

குருக்கள்மட பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பிச்சைக்காரர்கள் ரவுண்டு கட்டி உட்கார்ந்து கொண்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் யாசகம் கேட்டு வருகின்றனர்.

பிச்சைக்காரர்களுக்கு முன்பாக கால் ஒன்றை இழந்த ஒருவர் கற்பூரம், தேங்காய் விற்று வரும் நிலையில் இவர்களோ ஒரு உழைப்பும் இல்லாமல் பிச்சை கேட்டு வருகின்றனர்.

அதே கோவிலில் குடும்ப வறுமை காரணமாக சின்னம் சிறுசுகள் பாடசாலைக்கு செல்லாமல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதனை நியாயப்படுத்த முடியாவிட்டாலும், உழைத்து உண்ண வேண்டும் என்ற ஓர்மத்தில் கற்பூரம் விற்றுப் பிழைக்கும் அவர்களின் செயலை நாம் கவனத்தில் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா.

ஆனால், சிறுவயதில் பாடசாலைக்கு செல்லாமல் உழைக்க செல்வதும், பெரியவர்கள் ஆனதும் உழைக்க செல்லாமல் பிச்சை எடுப்பதும் வேதனை தரும் விடயமே.

புனர்வாழ்வு அதிகார சபையினர், பிரதேச சபையினர் குறித்த முதியவர்களுக்கு ஏதாவது வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்கள் மற்றவர்களிடம் கையேந்தாமல் வாழ வழி செய்வார்களா?
Related

படங்கள் 7874344218879640976

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item