கோயில்கள்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் நீங்கும்

தீபாவளி அன்று உடல் ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற வயதானவர்களுக்கும் அன்னதானம் அளித்தால் சனியினால் ஏற்படும் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்...


தீபாவளி அன்று உடல் ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற வயதானவர்களுக்கும் அன்னதானம் அளித்தால் சனியினால் ஏற்படும் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்.

சனி பகவானுக்குப் பிடித்தமானது கருப்பு எள். தீபாவளிப் பண்டிகை தினமான ஐப்பசி சதுர்த்தசி அன்று அதிகாலையில் கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும். அப்போது சனிக்கிரகத்தினை இயக்கும் சனி பகவான் தனக்கு மிகவும் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் ஊட்டுவதாகக் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் எள் கலந்த பலகாரங்களுக்கும் அன்று புத்துயிர் கிட்டுகிறது. 

அதனால், அன்று அதிகாலையில் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயை மக்கள் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளிப்பதால் அனைவரையும் சனிபகவான் வாழ்த்துவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும், அன்று நல்லெண்ணெயில் ஸ்ரீலட்சுமி, வாசம் செய்வதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. 

எனவே, தீபாவளித் திருநாள் சனி பகவானுக்கு மகிழ்ச்சியூட்டும் தினமாகும். மேலும் தீபாவளிக்குப் பலகாரங்கள் செய்யும்போது, எள் சேர்ப்பதும் உண்டு. குறிப்பாக முறுக்கு தயார் செய்யும் போது, அந்த மாவில் சிறிதளவு கருப்பு எள் சேர்ப்பார்கள். அதே போல், ‘எள் தட்டை’ பலகாரத்திலும் எள் சேர்க்கப்படுவதால் சனிபகவான் மகிழ்ச்சி அடைகிறார்.

தீபாவளி அன்று உடல் ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற வயதானவர்களுக்கும் அன்னதானம் செய்து ஆடைதானம் அளித்தால் சனியினால் ஏற்படும் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்

Related

புதிய செய்திகள் 8373623011010762768

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item