கோயில்கள்

இன்றைய ராசிபலன் 08.11.2016

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பொன்னும் பொருளும் சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இயந்திரப்ப...

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பொன்னும் பொருளும் சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

மேஷம்: வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். காரியத்தில் ஜெயம் உண்டாகும். மனத்துணிச்சல் கூடும்.

ரிஷபம்: வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள். தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

மிதுனம்: சிறு சங்கடம் ஏற்படும். விபத்து, ஆபரேஷன் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டிவரும். எதிலும் நிதானம் தேவை. வீண்வம்பு வேண்டாம்.

கடகம்: எதிர்ப்புக்கள் விலகும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை.

சிம்மம்: மன உறுதி கூடும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

கன்னி: மன மகிழ்ச்சி குறையும். மக்களால் சங்கடம் உண்டாகும். பயணம் தவிர்ப்பது நல்லது.

துலாம்: புதிய பொருட்சேர்க்கை நிகழும். அலைச்சல் வீண்போகாது. நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள்.

விருச்சிகம்: வெற்றிகள் குவியும். மனத்துணிவு கூடும். எதிர்ப்புக்கள் விலகும். நிலபுலங்கள் லாபம் தரும்.

தனுசு: பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் ஒரு எண்ணம் நிறைவேறும்.

மகரம்: வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். உடலில் காயம்படும்; கவனம் தேவை. எதிலும் வேகம் கூடாது.

கும்பம்: செலவுகள் அதிகரிக்கும். சகோதர நலனில் கவனம் தேவை. செயலில் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

மீனம்: பண வரவு அதிகமாகும். குடும்ப நலம் சிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.


Related

புதிய செய்திகள் 2339153541226994197

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item