கோயில்கள்

இன்றைய ராசிபலன் 23.11.2016

மேஷம்: சிறு சங்கடம் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கும். தந்தை நலனில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப...


மேஷம்: சிறு சங்கடம் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கும். தந்தை நலனில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்: எதிர்ப்புக்கள் இருக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை.

மிதுனம்: புதிய பதவிகளும் பொறுப்புக்களும் கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்: மக்களால் ஒரு எண்ணம் ஈடேறும். பண வரவு அதிகரிக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

சிம்மம்: நண்பர்கள் உதவுவார்கள். புதிய பதவிகள் தேடிவரும். சொத்துக்கள் சேரும். அலைச்சல் வீண்போகாது.

கன்னி: அரசு உதவி கிடைக்கும் முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும்.

துலாம்: பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பண வரவு கூடும்.

விருச்சிகம்: உயர் பொறுப்புக்கள் தேடிவரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அரசு உதவி கிடைக்கும்.

தனுசு: செலவுகள் அதிகமாகும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

மகரம்: பண வரவு அதிகரிக்கும். காப்பீடு மூலம் வருவாய் வந்துசேரும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும்.

கும்பம்: காரியத்தில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் அனுகூலம் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மீனம்: தந்தை நலம் பாதிக்கும். எதிரிகள் இருப்பார்கள்; என்றாலும் சமாளிப்பீர்கள். கால் சம்பந்தமான உபாதை ஏற்படும்.

பொதுப்பலன்: ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். ஆதாயம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும். காரியானுகூலம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். எழுத்தாற்றல் பளிச்சிடும்.

Related

புதிய செய்திகள் 1279793731366875556

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item