கோயில்கள்

இன்றைய ராசிபலன் 09.12.2016

மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணங்கள், செலவ...

மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணங்கள்,
செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள். 

ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள்.  

மிதுனம்: கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்று வீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங் களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.       

கடகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங் கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள். 

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

கன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றி யடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திறமைகள் வெளிப்படும் நாள்.   

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவின ர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீ ர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்-. அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அழகு, இளமைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Related

புதிய செய்திகள் 2103394488393204388

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item