கோயில்கள்

இன்றைய ராசிபலன்  16.12.2016

மேஷம் வியாபாரத்தில் தனலாபம் பெருகி மனமகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகம் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதா...

மேஷம்
வியாபாரத்தில் தனலாபம் பெருகி மனமகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகம் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
ரிஷபம்

சுமாரான நாள். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாகக் கடினமான உழைப்புத் தேவைப்படும். படிப்பிலும் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்

பணவரவு அதிகரிக்கும். வாக்கு மேன்மை ஓங்கும். குடும்ப சுகம் கூடி சந்ததி விருத்தி ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படும். இன்று அனைத்தும் இராஜயோகம்தான்.
கன்னி

பெரிய மனிதர்கள் சவகாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்.

மகரம்

உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல் தனவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அரசு உதவிகள் எளிதாக்க் கிடைக்கும்.

கடகம்

குடும்பத்தில் பெண்களால் வீண் பணச் செலவுகள் ஏற்படும். இடைவிடாத பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காகப் பேசாமல், நாவடக்கம் தேவை.
சிம்மம்

மற்றவருக்கு உதவி புரிவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தரும காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்

அனைத்து பாக்கியங்களும் பெருகும். இன்று உங்கள் காட்டில் மழைதான். தெய்வ நம்பிக்கையால், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும்.

மீனம்

அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அதிக உழைப்பின் காரணமாகத் தூக்கம் குறைவதால், உடல் நலம் கெடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
தனுசு

அரசு வழியில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு கிடைப்பதின் மூலமாக அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

விருச்சிகம்
உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது.

கும்பம்
கடமை தவறாது வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.

Related

புதிய செய்திகள் 4677759975771599626

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item