கோயில்கள்

இன்றைய ராசிபலன் 25.12.2016

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள்-. தாய்வழியில் மதி...
மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள்-. தாய்வழியில் மதிப்புக் கூடும். புது வேலை அமையும். வியா பாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.


மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்கள் உறவினர்களில் உண்மையானவர்களை நீங்கள் கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.


கடகம்: பழைய பிரச்னை களுக்கு சுமூகமான தீர்வு கண்டறிவீர்கள். உங்கள் தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.


துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் உங்களுக்கு வந்து நீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.

தனுசு: எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

மகரம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். திட்டம் நிறைவேறும் நாள்.


கும்பம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்

Related

புதிய செய்திகள் 5461152347129429854

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item