கோயில்கள்

சபரிமலை தொடர்பில் நீங்கள் தெரியாதவைகள்...!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பல கிலோ மீட்டர் ...


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பல கிலோ மீட்டர் துரரம் மலை மீது, வெறும் காலுடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகரஜோதி அன்று, ஜோதி தரிசனம் செய்ய பல லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் மலையில் குவிகின்றனர். அதிக கூட்டநெரிசல் காரணமாக பல முறை விபத்து நடந்து பல உயிர்கள் பலியாகியுள்ளது.
மகரஜோதி வானத்தில் இருந்து தோன்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சபரிமலையில் இருந்து மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் தெய்வீக சக்தி என பக்தர்கள் கருதுகின்றனர்.
இந்த மகரஜோதி இயற்கையாக தெரியவில்லை என அங்கு சென்ற நக்கீரன் இதழின் பத்திரிக்கையாளர்கள் குழு தெரிவித்துள்ளது. ஆதிகாலத்தில் பொன்னம்பல மேட்டில் ஆதிவாசிகள் குடியிருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அது, 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சமபரிமலையில் இருந்து பார்ப்பதற்கு நட்சத்திரம் போல் காட்சி அளித்துள்ளது.
நட்சத்திரம் என நினைத்து பக்தர்கள் வழிபடதுவங்கினர். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய சபரிமலை தேவசம்போர்டு, கேரளா அரசு உதவியுடன் பொன்னம்பலமேட்டில் குடியிருந்த ஆதிவாசிகளை அப்புறப்படுத்திவிட்டு,
அங்கிருந்து ஜோதி நாளன்று, செய்கையாக கற்பூர கட்டிகளை பற்ற வைத்து தூக்கிப் பிடித்து, ஜோதியாக காண்பித்து, பக்தர்களை ஏமாற்றுவதாக நக்கீரன் குழு தெரிவிக்கிறது.
இந்த உண்மையை யாரும் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக பொன்னம்பல மேடு பகுதிக்கு யாரும் செல்ல கூடாது என தடை விதித்து, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த உண்மை கேரளா மக்களுக்கு தெரியும் என்பதாலேயே கேரள மக்கள் அதிகம் சபரி மலைக்கு செல்வதில்லை என்றும் அதே நேரம் கோவில் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருவதால், மற்றவர்களுக்கு இதை சொல்லாமல் கேரள மக்கள் அமைதியாக இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

Related

கோயில்கள் 6260058133849067788

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item