கோயில்கள்

கோலம் மார்கழி மாதத்தில் போடுவதன் சிறப்பு

மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக மார்கழியை கூறுகிறார்கள். எல்லா மாதங்களும் கோலம் போடுகிறார்கள். ...


மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக மார்கழியை கூறுகிறார்கள். எல்லா மாதங்களும் கோலம் போடுகிறார்கள். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு தான்.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் கோடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது. அந்நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது. வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். நல்ல காற்று ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.


அக்காலத்தில் அரிசி மாவால் தான் வீட்டின் முற்றத்தில் பலவகை கோலம் போடுவார்கள். கோலங்கள் தீயசக்திகளை வீட்டினும் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஊருக்கு முன் வாசல் தெளித்து கோலம் போடு, இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு என்றெல்லாம் வீட்டுப்பெரியவர்கள் சொல்வதுண்டு. யாராவது அதிகாலை வெளியில் போவதற்கு முன் வாசலில் கோலம் போடு, அவர்கள் போன பிறகு கோலம் போடாதே என்றெல்லாம் அவர்கள் கூறுவார்கள்.

கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும். அதோடு இல்லாமல் மனதுக்கும் உற்சாகம் தரும். நினைவாற்றலும் கிடைக்கிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளை சரியாக இணைத்து கோலம் போட முடியும். நம் மனதை பிரதிபலிப்பது தான் கோலம். கோலம் மன மகிழ்ச்சியை தரும் என்பார்கள்

Related

வாழ்க்கை 2440867355412094274

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item