கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 23.01.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்க லக்கங்கள் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்துக் கொடுத்துப...

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்க லக்கங்கள் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.பழைய பிரச்னைகள் தலைத் தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீ ர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் உதவுவார்கள். பயணங்க ளால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலை யையும் ஒப்படை க்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண் மையானவர்களை கண் டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளை களால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகாரி க்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீ ர்கள். பிள்ளைகளால் உறவி னர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

துலாம்: கணவன்-மனைவி க்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மகரம்: எதிர்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

கும்பம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறி வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 5476104775199259817

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item