கோயில்கள்

இன்றைய ராசிபலன் 31.01.2017

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்...



மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார் கள்.வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப் பான நாள்.

ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

கடகம்: இன்றும் மாலை 5.00 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.
கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்
தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்: மாலை 5.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டா
தீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் மனவருத்தம் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்

Related

புதிய செய்திகள் 8314995363087112115

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item