கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 23.04.2017

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விருந்தினர் வருகை...

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும்.விருந்தினர் வருகை அதிகரிக் கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத் தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உடன்பி றந்தவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மிதுனம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

கடகம்: மாலை 5.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மாலை 5.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரி க்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.  

கன்னி:  எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக் கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.

விருச்சிகம்: எதிர்ப்புகளை யும் தாண்டி முன்னேறு வீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசி ப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்ப டுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.

மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் நன்மையும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கும்பம்: மாலை 5.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப் பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறு பட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். சில வற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.   

மீனம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். மாலை 5.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்

Related

புதிய செய்திகள் 2124243009303099771

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item