கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 25.04.2017

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். வ...



மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும்.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தொழிலில் லாபம்  அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சவாலில் வெற்றி கிட்டும் நாள்.
 
மிதுனம்: அதிரடியாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள்  பலிதமாகும் நாள்.

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலர் உங்கள்  வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால்  அலைகழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர்கள். வாகனத்தை சரி  செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில்  அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்  பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு: உடன் பிறந்தவர் களால் நன்மை உண்டு. தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்  கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். 

கும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். அழகு, இளமைக் கூடும். புதுப் பொருள் சேரும். உறவினர்கள்  மதிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 4288976362573189306

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item