கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 29.04.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக் கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலை உயர...

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக் கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும் பத்தில் எதிர்பாராத செலவு கள் வந்துப் போகும். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கசப்பான சம்பவங் களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து விலகும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர் கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து
கொள்வார்கள். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையை பெறு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரச்னைகளுக்கு எதார்த்த மான முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை
களை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: பழைய சிக்கல்கள் தீரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

Related

புதிய செய்திகள் 6473129837744134554

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item