கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 30.04.2017

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்...

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: கடந்த 2 நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்ல வும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக் கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கடகம்: எதிர்பார்த்த காரி யங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். திடீர் பயணங் கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபா ரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர் கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர் கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக் கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

தனுசு: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடை யும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். உறவினர்கள், நண் பர் களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்: புதிய சிந்தனை கள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்தி றமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Related

புதிய செய்திகள் 6612673668813023855

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item