கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 23.05.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும்...



மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். பழைய சிக்கல்கள் தீரும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். போராட்டமான நாள்.

துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். புதியவர் கள் நண்பர்களாவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். திடீர் உதவி கிட்டும் நாள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Related

புதிய செய்திகள் 5792353899483733060

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item