கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 04.06.2017

மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால்...

மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்: நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புதுப் பொருள் சேரும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர் கள். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற் படும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசிப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங் கள் செய்வீர்கள். சிறப்பான நாள்.


தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர் கள். உறவினர்கள், நண்பர் களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோ சித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். சோர்வு, சலிப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். திட்டம் நிறைவேறும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகா ரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத் தில் போட்டிகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். நெருங்கியவர் களுக் காக மற்றவர்களின் உதவியை நாடு வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

Related

புதிய செய்திகள் 208807816069773997

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item