கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 06.06.2017

மேஷம் நிதி நிலை உயரும் நாள். நினைத்த காரியங்கள் நிச்சயித்தபடியே நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுபகாரிய பேச்சுக்...


மேஷம்நிதி நிலை உயரும் நாள். நினைத்த காரியங்கள் நிச்சயித்தபடியே நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகி மன நிம்மதியைக் கொடுக்கும்.


ரிஷபம்


ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும்.


மிதுனம்


விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கை பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும்.


கடகம்


நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.


சிம்மம்


வளர்ச்சி கூடும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.


கன்னி


குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைக் தரும். முன்னோர் சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும்.


துலாம்


கீர்த்திகள் வந்து சேர கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்படலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.


விருச்சிகம்


ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.பணவரவு திருப்தி தரும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு.


தனுசு


சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோக அனுகூலம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உங்கள் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.


மகரம் 


இடம் வாங்கும் முயற்சியில் இதயத்தைச் செலுத்தும் நாள். இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.


கும்பம்


வரன்கள் வாயிற்கதவைத் தட்டும் நாள். .சொந்தங்களின் வருகை உண்டு. தாய்வழி உறவினர்களால் தனவரவு கிடைக்கும். வாகன யோகம் உண்டு. வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.


மீனம்


வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிட்டும். வீட்டுச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

Related

புதிய செய்திகள் 7963567511142169239

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item