கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 07.06.2017

மேஷம் அதிரடி முடிவெடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நாள். உத்தியோகத்தில் உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வீடு கட்டும் பணிக்...

மேஷம்
அதிரடி முடிவெடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நாள். உத்தியோகத்தில் உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வீடு கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் சேரும்.
ரிஷபம்
முயற்சிகளில் வெற்றி காணும் நாள். வரவு திருப்தி தரும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும். வங்கிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
மிதுனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். நீண்ட நாளைய பகையன்று நட்பாகலாம்.
கடகம்
விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பம் காட்டும் நாள். வாங்கல்&கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். மாலையில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம்.
சிம்மம்
கற்றவர்களின் ஆலோசனை கைகொடுத்து உதவும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பயணம் பலன் தரும்.
கன்னி
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் சம்மந்தமான நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
துலாம்
நினைத்தது நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுகூலமான செய்தியன்று அன்னிய தேசத்திலிருந்து வந்து சேரலாம்.
விருச்சிகம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். நண்பர்களை நம்பிச் செய்த காரியம் பாதியிலேயே நிற்கலாம்.
தனுசு
அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடுகின்றதே என்ற கவலை மேலோங்கும். நண்பகலில் நல்ல தகவலைத் தரும் கடிதமொன்று வந்து சேரலாம்.
மகரம்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணங்களால் பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்மந்தமாக ஏற்பட்ட வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
கும்பம்
அரைகுறையாக நின்ற பணியைச் செய்து முடிக்கும் நாள். சிக்கனத்தைக் கையாளும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.
மீனம்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

Related

புதிய செய்திகள் 7652265329767872017

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item