கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 10.06.2017

மேஷம்:  மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைக ளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்க...

மேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைக
ளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு  
ரிஷபம்: மாலை 4.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும்.   
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்  
மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 4.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.   
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா  
கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.    
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்  
சிம்மம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.  
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே  
கன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.  
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்  
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். 
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு  
விருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைக்கொடுத்து உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்  
தனுசு: மாலை 4.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.  
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை  
மகரம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 4.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். 
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை  
கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். இரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்  
மீனம்: எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.  
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Related

புதிய செய்திகள் 3248954620070194916

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item