கோயில்கள்

இன்றையராசிபலன்ககள் 11-06-2017

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக்கொடுத்து உதவுவார்கள். விலகிச் ச...


மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக்கொடுத்து உதவுவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்

தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

கடகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

சிம்மம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கன்னி
எதிர்பார்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

துலாம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களை பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மகரம்
அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்
நீண்ட நாளாகத் தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Related

புதிய செய்திகள் 7042244089844008954

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item