கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 18.06.2017

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர் கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து ...

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர் கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.ரிஷபம்:  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. நெருங்கிய வர்கள் சிலர் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார் கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உற வினர்கள் மதிப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங் கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி யடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர் கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு:  சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

மீனம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்தில் இணக்கமாக செல்லவும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

Related

புதிய செய்திகள் 492203406976347599

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item