கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 24.06.2017

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் மனம் விட்டு பேசுவார் கள். 0அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள...

மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் மனம் விட்டு பேசுவார் கள். 0அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.



ரிஷபம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்
கும். உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்க படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். தாழ்வுமனப் பான்மை வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். செலவு களை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர் பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

Related

படங்கள் 7946032750663835336

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item