கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 25.06.2017

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர் கள் மதிப்பார்கள்.  வ...

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர் கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. நினைத்ததை முடிக்கும் நாள்.



ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். இனிமையான நாள். 

துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புது பொருள் சேரும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகார பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக் கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரிப் பார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். தாழ்வு மனப் பான்மை நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

Related

புதிய செய்திகள் 5576695933504116440

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item