கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 01.08.2017

மேஷம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறி...

மேஷம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைபயன்படுத்துவது நல்லது.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புது சொத்து வாங்கு வீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

கடகம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

துலாம்: காலை 8.53 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பண விஷயங்களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகார பதவியில்
இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

Related

புதிய செய்திகள் 6528353474737922194

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item