கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 01.07.2017

மேஷம் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். காரியத்தடை அகலும். நண்பர்களின் உதவி கிட்டும். குடும்ப சூழ்நிலைக்கேற்ப உ...மேஷம்
உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். காரியத்தடை அகலும். நண்பர்களின் உதவி கிட்டும். குடும்ப சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பயணம் பலன் தரும்.

ரிஷபம்
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் நாள். புது முயற்சி வெற்றி தரும். புகழ்கூடும். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். சிக்கலான காரியத்தையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மிதுனம்
முக்கியமான காரியத்திற்கு முடிவு எடுக்கும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். வருமானம் உயர்ந்தாலும், விரயங்களும் மேலோங்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

கடகம்
பகை அகலும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும் தொழிலில் கூட்டாளிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவீர்கள்.

சிம்மம்
தைரியத்தோடு செயல்படும் நாள். செய்யும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்க திட்டம் தீட்டுவீர்கள். முடிவடையாத காரியங்கள் முடிவாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.


கன்னி
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொழில் சீராகும். தொல்லை தந்த நண்பர்கள் விலகுவர். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரும்பும் விதத்தில் அமையும். பிரயாணம் மூலம் பிரபலமானவர்களைச் சந்திக்க நேரிடலாம்.

விருச்சகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி வெற்றிபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

தனுசு
நன்மைகள் நாடிவரும் நாள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். வியாபார விருத்தியுண்டு. உடல் நலம் சீராகும்.

மகரம்
நண்பர்கள் நல்ல தகவல்களைத் தரும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். காரியத் தடை அகலும். செலவு குறையும். தொழிலில் வளாச்சி ஏற்பட கடன் உதவி கிடைக்கும்.

கும்பம்
யோசித்துச் செயல்படுவதன் மூலம் யோகங்கள் வந்து சேரும் நாள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புக் குறையும். ஆன்மிக வழிபாடு அமைதியை வழங்கும். பயணங்களை யோசித்து ஒத்துக்கொள்வது நல்லது.

மீனம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். சகோதர ஒற்றுமை பலப்படும். தொழிலில் முன்னேற்றம் கூடும்.

Related

புதிய செய்திகள் 5347813763566653789

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item