கோயில்கள்

இன்றயராசிபலன்கள் 07-07-2017

மேஷம் மதியம் 1. 15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ...



மேஷம்
மதியம் 1. 15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ரிஷபம்
மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1. 15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

மிதுனம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கடகம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

சிம்மம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கன்னி
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

விருச்சிகம்
மதியம் 1. 15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்துப் போகும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

தனுசு
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1. 15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மகரம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கும்பம்உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கல்யாண முயற்சி பலிதமாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Related

புதிய செய்திகள் 1378097145827229428

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item