கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 09.10.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வர...

மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர் களை விமர்சிக்க வேண்டாம். உதவி செய்வ
தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பி.கள் வாடிக்கையாளர்களாவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.
கடகம்
கடகம்: தொட்டது துலங் கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி
கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்
துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வ மாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். போராடி வெல்லும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
மீனம்
மீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.

Related

புதிய செய்திகள் 8193266014698928358

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item