கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 21.07.2017

மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள்...

மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும் பத்தில் நிம்மதி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். உங்களை பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கடகம்: உணர்ச்சி வேகத் தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர் களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுக தொந்தரவு கள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.

கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அடுக்கடுக் கான வேலைகளால் அவதி படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற் படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

தனுசு: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி யடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.  வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

Related

புதிய செய்திகள் 5165539616029205187

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item