கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 30.07.2017

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர...

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.உத்யோ கத்தில் சகஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தாரின் ஒத்துழைப்பு அதி கரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் முழு மையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுப்பது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: எடுத்த வேலை யை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர் களால் அனுகூலம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்

மகரம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உங் களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Related

புதிய செய்திகள் 2152457980653153765

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item