கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 03.08.2017

மேஷம்: இன்றும் இரவு 8.27 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத...

மேஷம்: இன்றும் இரவு 8.27 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். இரவு 8.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
மிதுனம்

மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.
கடகம்

கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.
சிம்மம்

சிம்மம்: நட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி

கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.
துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதரர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்

விருச்சிகம்: இரவு 8.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடன்பிறந்தவர்களால் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மகரம்

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும்.வாகன வசதி பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். செல்வாக்குக் கூடும் நாள்.
கும்பம்

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

Related

புதிய செய்திகள் 4823907563049326260

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item