கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 08.08.2017

மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பிரபலங்கள் உதவுவா...

மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். மதிப்புக்  கூடும் நாள்.

ரிஷபம்:  நீண்ட நாளாக தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணம் வரும். பிள்ளை களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக் கும்.  அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

மிதுனம்: மாலை 5.26 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சகோதர வகை யில் அலைச்சல் இருக்கும். வெளிவட்டாரத்தில் பெரிய  பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலையில்  மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர் கள் அறிமுகமாவார்கள். தாய்வழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில்  மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5.26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.   

சிம்மம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத் தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.  தொட்டது துலங்கும் நாள்.   

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார் கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்:  தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். சகோதரங் கள் மதிப்பார்கள்.வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள்  அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

தனுசு: சுறுசுறுப்புடன் செயல் பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத் தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்: மாலை 5.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்ந்தாலும் தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள்.  சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மாலையில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள். 

கும்பம்: எதிர்பாராத பயணங் களும், செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வாகனம் பழுதாகும். வியாபா ரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் அனுசரித்துப் போங்கள். மாலை 5.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல் வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்பு கள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி சில பொறுப்புகளை  ஒப்படைப்பார். இனிமையான நாள்.

Related

புதிய செய்திகள் 1942835739348503806

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item