கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 14.08.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்...

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமத மாக கிடைக்கும். போராட்டமான நாள்.
ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமைக் கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். இனிமையான நாள்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். சாதிக்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

துலாம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களின் ஆதரவு பெருகும். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்

Related

புதிய செய்திகள் 1130456331426221777

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item