கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 17.08.2017

உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள்...

உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். கற்றுக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள். 


ரிஷபம்: காலை 11.11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்: காலை 11.11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சிறப்பான நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். சாதிக்கும் நாள்.

துலாம்: காலை 11.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு யாவும் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: காலை 11.11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

Related

புதிய செய்திகள் 3071537407997983381

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item