கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 03.09.2017

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புது அன...

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.


ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர் பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கடகம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டு வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது வாகனம் வாங்கு வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப்பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்

Related

புதிய செய்திகள் 7310037642408498826

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item