கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 05.09.2017

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெருங் கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர...

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெருங் கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டு வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர் பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள் வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவு கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்கு
தாரர்களின் பிரச்னை தீரும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படு வீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் களால் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

Related

புதிய செய்திகள் 6419338898476663258

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item