கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 08.08.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசா தீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வாகன...

மேஷம்: கணவன்-மனைவிக் குள் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசா தீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர் கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்க ளிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்  அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் வேலை யாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: எதிர்ப்புகள் அடங் கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். வெற்றி பெறும் நாள்.
கும்பம்

கும்பம்: இங்கிதமாகப் பேசி கடினமாக காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை சிந்தனை கள் தோன்றும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கண வன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

Related

புதிய செய்திகள் 5745252000991060945

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item