கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 10.08.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் ...

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் நாள்.

கடகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

Related

புதிய செய்திகள் 929080817028597934

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item